Translate

Saturday 7 July 2012

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளைக் கொன்றோம் - இலங்கை ராணுவ மந்திரி கோத்தபயாவின் ஒப்புதல் வாக்குமூலம்..! ஈழதேசம் செய்தி ..!

Posted Imageயுத்தத்தில் சரணடைந்த மற்றும் பிடிபட்ட விடுதலைப்புலிகளை கொல்லுமாறு ராணுவ தளபதிகளுக்கு உத்திரவிட்டேன். இந்த உத்தரவை மீறிய ஒரு சில தளபதிகளால் தான் தற்பொழுது பிரச்சனையே எழுந்துள்ளது என்கிறார் இலங்கையின் ராணுவ ஆலோசகரும் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே அவர்கள்.
லங்கா நியூஸ் வெப் என்ற இணைய தளத்தில், இலங்கையின் பாதுகாப்பு செயலர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்னா சில்வா எனது உத்தரவை ஏற்க மறுத்ததால் தான் கடந்த வார வவுனியா சிறை நாடகம் நடந்துள்ளது என்றார்.
அதாவது வன்னி யுத்த முனையிலும் முள்ளிவாய்க்கால் முனையிலும் வெள்ளைக் கொடியுடன் சரணடையும் விடுதலைப் புலிகளின் தலைவர்களையும், பிடிபடும் விடுதலைப் புலிகளின் கடைசி மட்ட தலைவர்கள் மற்றும் பெண் புலிகள் உட்பட  எவரையும் சரணடைய விடாமல் அங்கேயே அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாய ராஜபக்சே யுத்தத்தில் பங்கேற்ற அணைத்து ராணுவ கட்டளை தளபதிகளுக்கும் உத்தரவு  பிறப்பித்திருந்தார்.


இந்த ராணுவ கட்டளையை ஏற்க மறுத்ததின் விளைவு தான் இந்த வவுனியா சிறை நாடகம் என்கிறார் கோத்தபாயா ராஜபக்சே அவர்கள். இந்த சிறை சம்பவம் தொடர்ந்து விடுதலைப் புலிகள் பலம் பெற வேண்டும் என்பதற்காக சர்வதேச ரீதியில் பலமாக இருக்கும், இயங்கும் விடுதலைப் புலிகளால் தூண்டிவிடப்பட்ட சம்பவமே இந்த வன்னி சிறை நாடகம். 

இறுதி யுத்தத்தின் போது மேஜர் ஜெனரல் பிரசன்னா சில்வா அவர்கள் தலைமையில் 55 மற்றும் 58 வது ராணுவ அணியை வழிநடத்தி நந்திக் கடல் வழியே சென்று கொண்டிருக்கும் பொழுது கடல் புலிகளின் தலைவர் சசி குமார் பிடிபட்டார். இந்த சசி குமார் தலைமையில் தான் கடந்த வாரம் வவுனியா சிறை முற்றுகை நடந்துள்ளது.

எனவே தான், பாதுகாப்பு செயல் கோத்தபாய ராஜபக்சே கட்டளையுடன் தனிப்பட்ட முறையிலும் அணைத்து வித யூனிட் அதாவது பட்டாலியன் க்ரூப்பின் தளபதிகளுக்கு கட்டளையிட்டிருந்தார். வன்னி யுத்தத்தின் போது ராணுவ முற்றுகையின் போதும், பிடிபட்ட மற்றும் சரணடையும் அணைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் சுட்டுக் கொல்லுமாறு பிறப்பித்த உத்தரவை 53 - வது பிரிகேடியர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே நந்திக்கடல் அம்பாளைப் பொக்கவான் முற்றுகையில் எல்.டி.டி.இ., உறுப்பினர்கள்  சுமார் 308 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு அனைவரும் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் உயர் மட்ட தலைவர்கள் அனைவரும் வன்னி போரில் கொல்லப்பட்டனர். ஏனைய பதவிகளில் இல்லாத சாதாரண விடுதலைபுலிகளை மட்டுமே கைது செய்யப்பட்டு போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டனர். 58 வது படையணியின் மேஜர் ஜெனரல் சவெந்திர சில்வா அவர்களால்,இறுதிகட்ட போரின் போது  விடுதலைபுலிகளின் தலைவர்கள் நடேசன் மற்றும் புலித் தேவன் கையில் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த பொழுது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 

எனவே தான், இவ்வாறான பாதுகாப்பு செயலர் கோத்தபாயா உத்தரவுகளை  நடைமுறைப்படுத்தாமல் மேஜர் ஜெனரல் பிரசன்னா சில்வா அவர்கள் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பெயர்கள் மற்றும் ஏனைய விபரங்களை புகைப்படம் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுடன் ராணுவ போலீஸ் வசம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துவிட்டார். பிரசன்னா சில்வா அவர்களின் பிரிகேடியர் பிரிவில் கைது செய்யப்பட்ட எந்த விடுதலைப் புலிகளின் உயர் மட்ட தலைவர்கள் கொல்லப்படவில்லை, இதில் கடற்புலி சசி குமாரும் அடங்குவார்கள் என்றார் கோத்தபாயா அவர்கள். எனவே இவர்களையும் சுட்டுக் கொண்டிருந்தால் கடந்த வார சிறை முற்றுகை நாடகம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றார். 

தமிழில்
சங்கிலிக்கருப்பு

No comments:

Post a Comment