இலங்கை விமானப் படை வீரர்கள் பயிற்சியின் இடைநடுவே நாடு திரும்ப மாட்டார்கள் என இலங்கை அறிவித்துள்ளது.சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு 9 மாத தொழில்நுட்ப பயிற்சி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக இலங்கை விமானப்படை வீரர்கள் ஒன்பது பேர் சென்றிருந்தனர்.
இந்நிலையில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி வழங்கக் கூடாது என தமிழ்நாட்டு முதலமைச்சர் உள்ளிட்ட மற்றைய தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்பின்னதாக இலங்கை வீரர்கள் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், வீர்களுக்கான பயிற்சி திட்டத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் இந்தியாவின் மற்றொரு இடத்தில் அவர்களது பயிற்சி தொடரும், வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment