Translate

Sunday, 15 July 2012

பெண்கள் இல்லாமல் ஆண்களால் ஒரு நாள் ஜீவித்திருக்க முடியுமா?


பெண்கள் இல்லாமல் ஆண்களால் ஒரு நாள் ஜீவித்திருக்க முடியுமா? நம்மில் எத்தனை பேர் அவர்களைச் சரிசமமாய் சரிபாதியாய்ப் பார்க்கிறோம்? திடீரென்று யோசித்துப் பார்த்தேன். எனக்கு என் அம்மாவின் இளமைக் காலம் பற்றி எதுவுமே தெரியாது. அவளது சிறுபிராயம், படிப்பை நிறுத்தியபொழுதுகள், விளை யாட்டு, காதல் எதுவுமே தெரியாது. ஏனோ அது பற்றி எல்லாம் கேட்காமல் பேசாமலேயே இத்தனை காலம் வந்திருக் கிறோம். இப்படி எத்தனை எத்தனை அம்மாக்கள் இருக்கிறார்கள்... பகிரப்படாத நினைவுகளோடு! 

முன்பு நான் தங்கியிருந்த ஒரு குடியிருப் பில் கீழ் வீட்டில் ஒரு தம்பதி குடியிருந்தனர். அந்த ஆள் தினமும் மனைவியைக் கண்ட படி திட்டிக்கொண்டே இருப்பார். அச்சடிக்க முடியாத வார்த்தைகளால் கடாசுவார். அக்கம்பக்கத்து ஆட்களெல் லாம் பயங்கர டென்ஷனிலேயே இருப்பார் கள். அவர் அடிக்கடி, "இந்த பொம்பளைக் கழுதைங்களே இப்பிடித்தானடி... தே...... ஒன்னையெல்லாம் எவன்டி நம்புவான்?" என்கிற வார்த்தைகளாலேயே சுடு தண்ணியை வீசுவார். அந்த பெண்மணி அமைதியாக உட்கார்ந்தே இருப்பார். தனது பெண் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்து கேட் பக்கத்திலேயே நிற் பார். எனக்கெல்லாம் அவ்வளவு கோபம் வரும். தினமும் இப்படியே கிடக்கும். ஒருநாள் அந்த ஆள் திடுதிப்பென்று செத்துப் போய்விட்டார். நெஞ்சு வலியில் பொட்டென்று போய்விட்டார். வெளியே கண்ணாடி பெட்டியில் வைத்திருந்தார்கள். அந்தப் பெண்மணி உருண்டு புரண்டு அழுதார். தடுக்கவே முடியாமல் அப்படி அழுதார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"அவ்வளவு கேவலமான ஆளுக்கா இப்படி அழுவுது இந்தம்மா?" இதைக் கேட்டு மேல் வீட்டுத் தாத்தா சொன்னார், "பொம்பளைங்க அப்பிடித்தான் தம்பி... என் அனுபவத்துல சொல்றேன்... நாமெல்லாம் அவங்களோட நெழலுக்குக் கூட துப்பில்ல!"

- ராஜுமுருகன் (வட்டியும் முதலும்)
 —

No comments:

Post a Comment