உண்மையான நல்லிணக்கத்தைப் பாதிக்கக் கூடிய, போருக்குப் பிந்திய புனர்வாழ்வுச் சவால்களில் சிறிலங்கா இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்சின் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடமாகாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பிய பின்னரே, அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், இயல்பு வாழ்வுக்குத் தடையாக உள்ள- காணாமற் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
“பல ஆண்டுகளாகத் தொடர்ந்த மோதல்கள், இடம்பெயர்வின் பின்னரும் அங்குள்ள மக்கள் பல சவால்களை சந்திப்பதை காணமுடிந்தது.
பல பத்தாண்டுகளாக உருவாகிய காணிப் பிரச்சினைகள் தொடர்கின்றன.
சிலர் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்நது என்று தெரியாத நிலையில் உள்ளனர்.
பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
சிறிலங்கா அரசாங்கம் இந்த விவகாரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நல்லிணக்கத்தை ஊக்குவிக்க பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து உதவிகளை வழங்கும்.
போருக்குப் பிந்திய விவசாரங்களுக்கு நல்லிணக்க சூழல் மற்முறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணமுடியும் என்று நான் நம்புகிறேன்.
இந்த முயற்சிகளுக்கும், சிறிலங்கா மக்களின் பாதுகாப்பு மற்றும் சுபீட்சத்துக்கும் பிரித்தானிய அரசு தொடர்ந்தும் உதவும்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment