Translate

Sunday, 15 July 2012

சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக ஜெனிவா கூட்டத்தில் ஆராய்வு

உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டிய - சிறிலங்காவில் காணாமற் போனோர் விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் , பலவந்தமாக அல்லது தன்னிச்சையாக காணாமற்போனோர் தொடர்பான செயற்பாட்டு அமைப்பின் 97வது கூட்டத்தொடரில் ஆராயப்பட்டுள்ளது. 


சிறிலங்காவில் காணாமற் போனோர் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய 13 சம்பவங்கள் தொடர்பாக இச்செயற்பாட்டு அமைப்பு ஆராய்ந்துள்ளது. 

அத்துடன் தற்போது புதிதாக கிடைக்கப் பெற்ற மற்றும் ஏற்கனவே கிடைக்கப் பெற்ற காணாமற்போனோர் தொடர்பான 200 சம்பவங்களையும் இவ்வமைப்பு தனது கவனத்தில் எடுத்துள்ளது. 

ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அல்ஜீரியா, ஆர்ஜென்ரீனா, பங்களாதேஸ், பெலாரஸ், பூட்டான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொலம்பியா, ஜனநாயக மக்கள் குடியரசான கொரியா, எகிப்து, ஜோர்ஜியா, கென்யா, குவைத், லவோஸ், லிபியா, மெக்சிக்கோ, மொரோக்கோ, மியான்மார், பாகிஸ்தான், பெரு, ரஸ்யா, சவுதி அரேபியா, ஸ்பெயின், சிறிலங்கா, சுவிற்சர்லாந்து, சிரியா, ரஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்கி, உஸ்பெகிஸ்தான், ஜெமன் போன்ற நாடுகளில் இடம்பெற்ற காணாமற் போன சம்பவங்கள் தொடர்பாக இக்கூட்டத் தொடரில் ஐந்து மனித உரிமை வல்லுனர்கள் ஆராய்ந்துள்ளனர். 

ஜெனீவாவில் 2012 யூலை 09 தொடக்கம் 13 வரை இடம்பெற்ற 97வது கூட்டத் தொடரில், காணாமற் போனோர் தொடர்பான கோரிக்கைகள், பொதுவான குற்றச்சாட்டுக்கள் மற்றும் பல்வேறு அரசாங்கங்களின் பதில்கள் போன்றவையும் மீளாய்வு செய்யப்பட்டன. 

பலவந்தமாக காணாமற்போன பெண்கள் மற்றும் சிறார்கள் தொடர்பில் அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமற் போதலிலிருந்து பாதுகாத்தலுக்கான இரு ஏற்பாடுகள் தொடர்பான பொதுவான கருத்துக்களும் இக்கூட்டத்தொடரில் கலந்துரையாடப்பட்டன. 

இதன் 98வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் 2012 ஒக்ரோபர் 31 தொடக்கம் நவம்பர் 09 வரை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment