Translate

Saturday, 7 July 2012

செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னாரில் போராட்டம்!


selvam-adaikalanathan_2

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னாரில் மீனவர்களுக்குக் கடற்படையினரால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாஸ் நடைமுறை, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட முறையில் அரச தரப்பு மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்தே மேற்படி சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதில் அரசியல் கட்சித் தலைவர்களான மனோ கணேசன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி ஆகியோரும் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், ஈ.சரவணபவன், வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்துகொள்வர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் சாத்வீகமான முறையில் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழுவினரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment