மஹியங்கனை: கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2012) இரவு இலங்கையின் மஹியங்கனை வட்டவன ஸ்ரீ பத்தினித் தேவாலயத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த கண்ணகியம்மன் சிலை திருட்டுப்போயுள்ள சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ஒரு இலட்சத்தி ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான கண்ணகி அம்மன் சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து மஹியங்கனைக் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்ணகியம்மன் சிலை திருட்டு குறித்த மேற்படி முறைப்பாட்டையடுத்து மஹியங்கனைப் பிரதேசக் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அண்மைக் காலமாக விகாரைகள், கோவில்கள், அருங்காட்சியகம் முதலானவற்றில் இருந்து புத்தர் சிலைகள் உட்பட விலை உயர்ந்த சிலைகள் பல மாயமாக மறைந்துவருகின்றமை, பொதுமக்கள் மத்தியில் பலத்த ஐயங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment