இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாத தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைச்சாலைகளில் தனது பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அரசியல் கைதிகள் மீதும் போராளிகள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள உளவியல் மற்றும் பயங்க்ரவாத யுத்தம் இந்திய, சீன அரசுகளதும் அமரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களதும் துணையோடு தொடர்கிறது.
தாக்குதலில் கோமா நிலையில் மயக்கமுற்ற இளைஞரொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே உண்மைகள் வெளிவந்துள்ளது.
யாழ்ப்பாணம் கண்டி வீதி கொடிகாமம் பகுதியை சேர்ந்தவரான சுந்தரம் சதீஸ்குமார் (வயது34) என்பவரே இவ்வாறு கோமா மயக்க நிலையில் காலி களுவாப்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திருமணமான இவருக்கு கவிதா எனும் மனைவியும் சாகித்யா எனும் சிறு குழந்தையும் உண்டு.இது வரை காலமும் புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 21ம் தகிதியே காலி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 24ம் திகதி வெள்ளிக்கிழமை வழைமை போன்று தனது கணவனை பார்வையிடப்போன கவிதாவிற்கு அவர் காலி சிறைக்கு மாற்றஞ்செய்யப்பட்டமை தொடர்பாக அறியத்தரப்பட்டது. அதையடுத்து காலி நிறைக்கு தேடி சென்றவேளையிலேயே கோமா நிலையினில் தனது கணவரை அவர் கண்டுள்ளார். எனினும் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஏனையோர் பற்றியோ தகவல்களை பெறமுடியாதுள்ளது.எனினும் பலர் சிகிச்சை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையினில் சிறைகளள் தடுத்து வைக்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

No comments:
Post a Comment