சிறிலங்காவில் நடைபெறும் கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று முன்தினம் ஆரம்பமான கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பங்கேற்றுள்ளது.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை அடுத்து, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து, பிரித்தானியா கடும் விமர்சனங்களைத் தெரிவித்து வந்த போதிலும் இந்தக் கூட்டத்துக்கு தமது நாடாளுமன்றக்குழுவை கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவும் கூட பெரியதொரு நாடாளுமன்றக் குழுவை இந்தக் கூட்டத்துக்காக கொழும்புக்கு அனுப்பியுள்ளது.
சிறிலங்கா அதிபர் ஆரம்பித்து வைக்கும் இந்தக் கூட்டத்தை புறக்கணிக்குமாறு தமிழ்நாடு அழைப்பு விடுத்திருந்த போதிலும் இந்தியா பெரியதொரு குழுவை கொழும்புக்கு அனுப்பியுள்ளது.
எனினும்,இந்தியாவின் நாடாளுமன்றக் குழுவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://thaaitamil.com/?p=31956

No comments:
Post a Comment