உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை நட்சத்திர விடுதியொன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பானது சுமார் 1 மணித்தியாலம் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு தமக்கு திருப்திகரமான அமைந்தாக சந்திப்பு குறித்து குறிப்பிடுகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
இன்றைய சந்திப்பு குறித்து இரா.சம்பந்தன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் "இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்குடனான இன்றைய சந்திப்பு மிகவும் திருப்பதிகரமானதாக அமைந்திருந்தது.
இன்றைய சந்திப்பின் போது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும், கிழக்கில் நடைபெறுகின்ற விடயங்கள், மற்றும் நடைபெறவேண்டிய விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் கிழக்கு மாகாகணசபைத் தேர்தலின் பின்னரான நிலைமைகள் மற்றும் விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அதுமாத்திரமின்றி அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் அதிலுள்ள குறைப்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
முக்கியமாக காவலில் உள்ள தமிழ் இளைஞர்கள் குறித்தும், காணாமல் போனோர் குறித்தும் அதிக கவணம் செலுத்தப்பட்டதுடன், இராணுவ ஆக்கிரமிப்பு, காணி சுவீகரிப்பு, அரசியலத் தீர்வு விடயம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்பன தொடர்பிலும் அதிக கரிசனையுடனான பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்"
ரொப்பர்ட் ஓ பிளேக் ஜீ.எல்.பீரிஸ் இன்று சந்திப்பு – தேசிய பிரச்சினை அரசியல் தீர்வு குறித்து ஆராய்வு.
01:46am
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கிற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் சந்திப்பொன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது.
அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலஙகை சென்றடைந்தார்.
இதற்கமைய இலங்கையில் தங்கியிருக்கும் பிளெக் இலங்கை ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து ஆராய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வெளிவிவகார அமைச்சில் இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும் ரொபர்ட் ஓ பிளெக்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலமைகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமுலாக்கம், தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடையங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற வன்னிக்கும் நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளையும் ஆராயவுள்ள அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரச சார்பற்ற அமைப்புக்கள் ஆகியவற்றின் முக்கியஸ்த்தர்களையும் சந்தித்து தற்போதைய நிலமைகள் தொடர்பில் கலந்துரரையாடவுள்ளதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
அது மாத்திரமன்றி இம்முறை தனது விஜயத்தின் போது இலங்கை வர்த்தகர்கள் குழு ஒன்றையும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.globaltam...IN/article.aspx

No comments:
Post a Comment