Translate

Tuesday 11 September 2012

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கப்படும்


முதலமைச்சர் யார் மகிந்த அறிவிப்பார்:- வேறு வழியில்லை என்பதால் TNAயும் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள முடியும் அரசாங்கம்:-
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கப்படும் -
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம், முதலமைச்சர் யார் என்பது குறித்து ஜனாதிபதி அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.  கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் தனித்து போட்டியிட்டாலும் அரசாங்கத்துடன் இணைந்தே ஆட்சியமைக்க உள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை மூன்று மாகாண சபைகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் நாளைய தினம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட உள்ளதாக மைத்திரிபால கூறியுள்ளார். 
வேறு வழியில்லை என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள முடியும்
 
முஸ்லிம் காங்கிஸூடன் இணைந்து ஆட்சி அமைக்கப்படும்
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து ஆட்சி அமைக்கப்படும் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
 
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
கிழக்கு மாகாணசபையில் ஆளும் கட்சினால் அமைக்கப்படும் கூட்டமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வேறு வழியில்லை என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள முடியும் என மைத்திரிபால சிறிசேன நகைச்சுவையாகத்தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment