பிரித்தானியாவிலிருந்து திரும்பிய தமிழர்கள் மீது கடும் சித்திரவதை
பிரித்தானியாவிலிருந்து விருப்பத்திற்கு மாறாக நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் மற்றும் குறுகிய கால பயணத்தை சுற்றுலா அடிப்படையில் சென்ற தமிழர்களை கைது செய்யும் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் கடும் சித்திரவதைக்கு உட்படுத்துவதாக லண்டனை தளமாகக் கொண்டியங்கும் சித்திரவதைக்கு எதிரான Freedom fromTorture என்ற மனித உரிமைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு சென்ற தமிழர்கள் மீது வேண்டுமென்றே சிகரெட்டாலும் சூடாக்கிய இரும்புக் கம்பிகளாலும் சுடுதல், வயர்களாலும் பிளாஸ்ரிக் பைப்புகளாலும் மிருகத்தனமான முறையில் தாக்குதல் போன்றவை சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் சித்திரவதைகளுக்காக கைக்கொள்ளும் முறமை என்றும் அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்மின் ஆய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் மாநாடு சிறீலங்காவில் நடைபெறும் தருணத்தில் இந்த அறிக்கை வெளிவந்தமை சிறீலங்காவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்மின் கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பூரண அறிக்கையை பின்வரும் இணைப்பினுடாக வாசிக்கலாம்.
http://www.freedomfromtorture.org/news-blogs/6659
No comments:
Post a Comment