கொழும்பு:இலங்கையில், தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வழி செய்யும், 13வது சட்ட திருத்தத்தை தடை செய்யும் படி, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிபர் ராஜபக்ஷேவை வற்புறுத்தியுள்ளன.
தமிழர்கள் வாழும் பகுதிக்கு, அதிக அதிகாரங்களை அளிக்க வழி செய்யும், 13வது சட்ட திருத்தம், 87ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது. இலங்கையின் ஆளும் கூட்டணியில் உள்ள, தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான, விமல் வீரவன்சா குறிப்பிடுகையில், "13வது சட்டத் திருத்தத்தை நீக்குவதற்கு ஏற்ப, கருத்து கணிப்பை நடத்த, பார்லிமென்ட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். இந்த சட்டத் திருத்தம் இருக்கும் வரை, அரசு படைகளால், தீவிரமாக செயல்பட முடியாது' என்றார்.
ஆளும் கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான, சிங்கள பாரம்பரிய கட்சியின் தலைவர், உதய காமன்பிலா குறிப்பிடுகையில், "இந்த சட்டம் அமலில் இருக்கும் வரை, மற்றொரு பிரிவினைக்கு வழி ஏற்படும். எனவே, இதை நீக்க அதிபர் ராஜபக்ஷே வழி செய்ய வேண்டும்' என்றார்.

No comments:
Post a Comment