யுத்த வெற்றியை விற்பனை செய்து ஆட்சி நடத்திய அரசாங்கம் தற்போது மாற்று வழியாக 13ம் திருத்தச் சட்டம் குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்ற நாடு எதிர் நோக்கியுள்ள பாரிய நெருக்கடி நிலைமைகள் தொடர்பான மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறு 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் விரைவில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது, அரசாங்கத்தின் மொத்த வருமானமும் கடன் மற்றும் வட்டிகளை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்நொக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முறைகேடுகளின் மூலம் தேர்தல் வெற்றிகளை ஈட்டிய போது மாகாண சபை முறைமை சிறந்ததாக இருந்த அரசாங்கத்திற்கு தற்போது மாகாணசபை முறைமை சரியில்லை என தோன்றியுள்ளது
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்பதனை விளங்கிக் கொண்ட அரசாங்கம் இவ்வாறு மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க முயற்சித்து வருவதாகத் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு அதிகாரப் பகிர்வு காரணமல்ல எனவும், பாரியளவிலான ஊழல் மோசடிகளே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment