Translate

Monday, 22 October 2012

பிரித்தானியா இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புகிறது

60 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களிடம் உரிய பயண ஆவணங்கள் இருக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


பிரித்தானி உட்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பெரு நிறுவனங்களின் மூலதனக் கொள்ளை தோற்றுவித்த பொருளாதார நெருக்கடியை நிற வெறி கலந்த பாசிசமாக ஐரோப்பிய நாடுகள் மாற்ற முனைகின்றன. இதன் வெளிப்பாடுகளாக அகதிகளை சட்டவிரோதமான முறைகளில் திருப்பி அனுப்புவதும், அவற்றை மிகைப்படுத்தி ஊடகங்களில் வெளியிடுவதும் நடந்துவருகின்றது.

No comments:

Post a Comment