தமிழ் மக்களுக்குத் தான் துரோகம் செய்யமாட்டேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதுடெல்லியில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் புதுடெல்லி செய்தியாளர் எஸ்.வெங்கட்நாராயனுக்கு அளித்த இரண்டு மணிநேர தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இனப்பிரச்சினைக்கு நடைமுறைக்கு ஏற்ப அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தீர்வை எட்டுவதற்கு தமிழர்கள் தயாராக உள்ளனர்.
ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் நியாயமான, சாத்தியமான, நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வை எட்டுவதற்கான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது.
ஆனால், தெளிவான மனச்சாட்சியுடன் கூடிய உறுதிப்பாட்டை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வழங்காவிட்டால், நான் தெரிவுக்குழுவுக்கு போகமாட்டேன்.
எனது மக்களுக்குத் துரோகம் செய்யமாட்டேன்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
No comments:
Post a Comment