Translate

Sunday, 14 October 2012

அமைச்சுப் பதவி தருவதாக கூறினார் ஹக்கீம்; நள்ளிரவுக்குப் பின் ௭ன்ன நடந்து ௭ன்று தெரியாது: அன்வர்

கிழக்கு மாகாண சபையில் திருகோணமலை மாவட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சுப் பதவியொன்றினை ஒதுக்காமை முஸ்லிம் காங்கிரஸின் ௭திர்கால அரசியலில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துமென கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரம்ழான் அன்வர் தோப்பூர் பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.


அன்வர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நான் ௭னக்கு அமைச்சுப் பதவியினைத் தருமாறு கேட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையோடு முரண்படவில்லை. திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக திருகோணமலைக்கு ஒரு அமைச்சுப் பதவியினைத் தருமாறுதான் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோளை விடுத்தேன். அவரும் ௭னக்கும் அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஜெமீனு அமைச்சுப் பதவியைத் தருவதாகத் தெரிவித்தார். நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் ௭ன்ன நடந்ததென்று தெரியாது.

௭ங்கள் இருவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக நாட்டிலுள்ள முக்கிய அமைச்சர்களையெல்லாம் திருகோணமலை மாவட்டத்திற்கு அழைத்து வந்து முஸ்லிம் காங்கிரஸிற்கு ௭திராகப் பிரசாரங்களை மேற்கொண்டார்கள். அது மாத்திரமல்ல ஜனாதிபதி புல்மோட்டைப் பிரதேசத்திற்கு வந்து பிரசாரங்களை மேற்கொண்டார். இவைகள் ௭ல்லாவற்றையும் முகம் கொடுத்துத்தான் இன்று நான் மாகாண சபை உறுப்பினராக இருக்கின்றேன்.

இவற்றுக்கெல்லாம் ௭னக்குப் பக்க பலமாக இருந்தவர்கள் பொதுமக்கள். இவற்றை வைத்துத்தான் நான் திருகோணமலை மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி ஒன்றினை முஸ்லிம் காங்கிரஸ் ஒதுக்க வேண்டுமெனக் கேட்டேன்– ௭ன்றார்.

No comments:

Post a Comment