உண்மைக்கு புறம்பான செய்திகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டுகின்றோம்..
ஜெனீவா ஐ.நா முன்றிலில் தமிழர்களும் சிங்களவர்களும் ஏட்டிக்கு போட்டியாக ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றினை தகவற்துறை அமைச்சகம் 21-02-2012 செவ்வாய்கிழமை விடுத்துள்ளது.
தாயக மக்களை இராணுவ அடக்குமுறைக்குள் வைத்துள்ள சிங்கள பேரினவாத அரச, புலம்பெயர் தமிழர்களின் மனவலிமையையும், மக்கள் போராட்டங்களையும் சிதைக்க நினைக்கின்றது குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கை, இத்தகைய செய்திகள் குறித்து மக்களை விழிப்பாக இருக்குமாறு வேண்டியுள்ளது.
அறிக்கையின் முழுவிபரம் :
சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில், ஜெனீவா ஐ.நா முன்றலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், பெப்ரவரி 27ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஏட்டிக்கு போட்டியாக, சிங்களவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபகின்றனர் என வெளிவந்துள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என்பதனை அறியத்தருகின்றோம்.
ஐ.நா மனித உரிமைச் சபை தொடங்குகின்ற பெப்ரவரி 27ம் நாள் திங்கட்கிழமை, தமிழர்களின் மக்கள் போராட்டத்துக்கு மட்டுமே சுவிஸ் காவல்துறை அனுமதியளித்துள்ள நிலையில், இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகள், மக்களை குழப்பும் தீயசக்திகளின் சதி நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது.
புலம்பெயர் தமிழர்களின் இத்தகைய மக்கள் போராட்டங்கள் தன் மீதான சர்வதேச அழுத்தங்களுக்கு வலுவூட்டுகின்றன எனும் அச்சநிலையில், சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முனைந்து வருகின்றமை குறித்து மக்களை விழிப்பாக இருக்க வேண்டுகின்றோம்.
தாயக மக்களை இராணுவ அடக்குமுறைக்குள் வைத்துள்ள சிங்கள பேரினவாத அரச, புலம்பெயர் தமிழர்களின் மனவலிமையையும், மக்கள் போராட்டங்களையும் சிதைக்க நினைக்கின்றது.
இந்நிலையில், எதிர்வரும் 27ம் நாள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால் தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு, ஒன்றுபட்ட சக்தியாக, தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் இனவழிப்பு உண்மை முகத்தை அம்பலப்படுத்த, சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்த உறுதியெடுத்துக் கொள்வோம்.
இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment