ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரம்: தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் நீதிக்கான குரல்கள்
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை மையங் கொண்டுள்ள நெருக்கடி தமிழகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு நோக்கிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இன்று செவ்வாய்கிழமை கூடிய தேமுதிக கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் சிறிலங்காவுக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பது ஒன்றே தீர்வென குறித்துள்ள தேமுதிக தீர்மானம், தமிழக மீனவர்களின் கருத்தை அறிந்துகொள்ளாமல்சிறிலங்கா இடையே கச்சத்தீவு தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையை இழந்துள்ளதோடு, சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுவது வாடிக்கையாகிவிட்டது.
எனவே இந்தியா - சிறிலங்கா இடையே போடப்பட்ட ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யுமாறு தேமுதிக பொதுக்குழு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்கெடுக்கவிருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர்கள் குழுவில் பங்கெடுக்கவுள்ள பேராசிரியர் பொல் நியூமன் அவர்கள் தமிழ் பேசும் உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க ஐ.நா மனித உரிமைச் சபையின் 19வது கூட்டத்தொடரினை மையப்படுத்தி அனைவரும் அணிதிரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழீழம் நோக்கிய பயணத்தை நோக்கி அனைவரும் ஒருமுகமாக ஐ.நா மனித உரிமைச் சபையை நோக்கி அணிதிரள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். ஐ நா சபையில் சிறிலங்காவை நோக்கிய தீர்மானத்தை மையப்படுத்தி சென்னையில் கருத்தரங்கம் ஏற்பாடு ஒன்று நடந்துள்ளது.
மனித உரிமை ஆர்வலர் மற்றும் பேராசிரியர் பால் நியூ மேன் பெங்களூர் பல்கலைகழகம் , பேராசிரியர் மணிவண்ணன் சென்னை பல்கலை கழகம் , மற்றும் தோழர் தியாகு கலந்து கொண்டு வரவிருக்கும் ஐ நா கூட்டத்தொடர் நிச்சயம் சிறிலங்காவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை கருத்துரைத்துள்ளனர்.
இதேவேளை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைச் சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தக்கு ஆதரவாக இந்தியா செயல்படக்கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.
2009-இல் இந்த மனித உரிமைச் சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய இந்திய அரசு, இப்பொழுது ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைச் சபைக் கூட்டத்திலும் அத்தகைய அத்தகைய நிலையை செய்யக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment