Translate

Tuesday 21 February 2012

வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்


வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
 இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மோசடி தடுப்பு பிரிவின் புலனாய்வு மற்றும் விசேட நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளர் சப் இன்ஸ்பெக்டர் ஜனக சமிந்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
 
வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டுவருபவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும், மோசடி தடுப்புப் பிரிவு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
இலங்கையிலிருந்து கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 269 பேரிடமிருந்து பல கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு ஆபிரிக்க நாடான டோஹோ மற்றும் மாலிக்கு கொண்டு சென்று கைவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதான சந்தேக நபர் ஒருவரை மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்துள்ளனர்.
 
இந்தச் சந்தேக நபரால் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 269 பேரில் 267 பேர் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த வர்கள் என்பதனாலேயே இந்த வேண்டு கோளை விடுப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
 
தமிழ் இளைஞர், யுவதிகள் என்று தெரிவித்த புலனாய்வு மற்றும் விசேட நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி, இவற்றில் அதிகமானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதனாலேயே இந்த வேண்டு கோளை விடுப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
 
வெளிநாட்டில் அதிகூடிய சம்பளங்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறியே மிகவும் சூட்சுமமான முறையில் இந்த மோசடி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, கொம்பனித் தெரு பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்தே இந்த மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளமை கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மூலம் தெரியவந்துள்ளது.
 
இது போன்ற மோசடி கும்பலின் மோசடி நடவடிக்கைகளுக்கு சில முன்னணி பயண  முகவர் நிலையங்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது. நூறு வீதம் அசலானது போன்றே போலி ஆவணங்கள் மற்றும் விசாக்கள் தயாரிக்கப்பட்டு இவர்கள் விமான நிலையத்திலுள்ள சில அதிகாரிகளின் ஒத் துழைப்புடன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருவதாகவும் சப் இன்ஸ் பெக்டர் ஜனக சமிந்த தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment