Translate

Tuesday, 18 September 2012

ராஜப‌க்சவு‌க்கு கரு‌ப்புகொடி கா‌ட்ட ம.‌பி. செ‌ன்றா‌ர் வைகோ

மத்திய பிரதேசத்துக்கு வரு‌ம் 21ஆ‌ம் தேதி வரு‌ம் இல‌‌‌ங்கை அ‌திப‌ர் ராஜபக்சவு‌க்கு கறு‌ப்பு கொடி கா‌‌ட்டுவத‌ற்காக தொ‌ண்ட‌ர்க‌ளுட‌ன் 15 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பேரு‌ந்துக‌‌ளி‌ல் ம‌.‌தி.மு.க பொது‌ச் செயல‌‌ர் வைகோ இ‌ன்று சா‌ஞ்‌சி புற‌ப்ப‌ட்டு செ‌ன்றா‌ர். 

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி‌யி‌ல் நடைபெறும் புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வத‌ற்காக இல‌ங்கை அ‌திப‌ர் ராஜபக்சே வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி இந்தியா வரு‌கிறா‌‌ர்.

அவ‌ரி‌ன் வருகைக்கு எதிர்ப்பு தெ‌ரி‌வி‌க்கு‌ம் ‌விதமாக வைகோ தலைமையில் வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி சா‌ஞ்‌சி‌யி‌ல் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறு‌கிறது.

இந்த போராட்டத்தை கைவிடும் படி மத்திய பிரதேச முதல்வ‌ர் சிவராஜ்சிங் சவுகான் வே‌ண்டுகோளை பு‌ற‌க்க‌ணி‌த்த வைகோ, இன்று சென்னை அண்ணசமாதி முன்பிருந்து 15க்கும் மேற்பட்ட பேரு‌ந்துகளில் தொ‌ண்ட‌ர்களுட‌ன் புறப்பட்டு சென்றனர். 

No comments:

Post a Comment